அடப் பாவிகளா! புற்றுநோய் மருந்தில் போலிகளா?

போலியாக புற்றுநோய் மருந்துகளை தயாரித்து பெரிய தொகைக்கு அதனை விற்று ஏமாற்றியுள்ள கும்பல் கைதாகியிருக்கிறது.
அடப் பாவிகளா! புற்றுநோய் மருந்தில் போலிகளா?

போலியான புற்றுநோய் மருந்துகள் மற்றும் கீமோதெரபி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த வழக்கை விசாரித்து வரும் தில்லி காவல்துறையின் குற்றவியல் துறையினர், ஐஐடி பட்டதாரி ஒருவரை பிகாரில் கைது செய்திருக்கிறது.

பிகார் மாநிலம் முஸாபர்நகர் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா கிருஷ்ணா என்பவருடன் சேர்த்து, இந்த வழக்கில் இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

போலி புற்றுநோய் மருந்து தயாரிப்பில் மூளையாக செயல்பட்ட நீரஜ் சௌஹானிடமிருந்து, போலி மருந்துகளை கொள்முதல் செய்து வந்ததாக கிருஷ்ணா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புவனேஸ்வரம் ஐஐடியில் பொறியியல் பட்டம் படித்த கிருஷ்ணா, நீரஜிடமிருந்து கொள்முதல் செய்யும் போலி புற்றுநோய் மருந்துகளை பிகார், தில்லி-என்சிஆர் மற்றும் புனேவில் விற்பனை செய்து வந்துள்ளார். இவர், சொந்தமாக மருந்து விற்பனைக் கடைகளையும் நடத்தி வந்துள்ளார். அங்குதான் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அடப் பாவிகளா! புற்றுநோய் மருந்தில் போலிகளா?
எச்சரிக்கை! தூக்கத்தில் பிரச்னையா.. அது மூளை, நினைவாற்றலை பாதிக்கலாம்!!

கிருஷ்ணா, புற்றுநோயாளிகளுக்கு விலைக் குறைவான மருந்துகளை தனது கடையில் விற்பனை செய்வதாகக் கூறி ஏமாற்றி, போலியான மருந்துகளை விற்றுள்ளார்.

கிருஷ்ணா கைது செய்யப்பட்டு, தில்லி அழைத்து வரப்பட்டுள்ளார். புற்றுநோயாளிகளிடம் போலி மருந்துகளை விற்பனை செய்து பல கோடி ரூபாய் ஈட்டி வந்துள்ளதும், இவர் நீரஜூடன் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், போலியான ஊசி மருந்துகளை, அவர் ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரத்துக்கு விற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிர்ச்சித் தரும் தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. அதாவது, புற்றுநோய் எதிர்ப்பு மருந்து என்று இவர்கள் விற்பனை செய்துவந்த விலை உயர்ந்த மருந்துகள் அனைத்தும், பூஞ்ஜை தொற்று எதிர்ப்பு மருந்துகள் என்பதும், இவற்றின் விலை வெறும் ரூ.100 என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் என்னவென்றால்?

ரூ.4 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல்

மருத்துவமனை ஊழியர் ஒருவர், புற்றுநோய் மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, அந்தக் குப்பிகளை இந்த கும்பலிடம் கொடுத்துள்ளார்.

அதனை போலி மருந்துகளைக் கொண்டு நிரப்பி விற்பனை செய்துள்ளனர்.

ஒவ்வொரு மருந்துக்கும் ரூ.150 - ரூ.200 செலவிட்டு போலி மருந்தை நிரப்பி ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் பல இடங்களில் இது தொடர்பான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அடப் பாவிகளா! புற்றுநோய் மருந்தில் போலிகளா?
இறந்தும் வாழும் தந்தை! குழந்தையை மகிழ்வித்து நன்றி செலுத்திய மருத்துவமனை!!

இதுவரை, கிருஷ்ணா விலை உயர்ந்த 30 ஊசி மருந்துகளை விற்பனை செய்திருக்கலாம் என்று காவலர்கள் சந்தேகிக்கின்றனர். கிருஷ்ணாவின் கடையிலிருந்து போலியான மருந்துகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இந்தக் கூட்டம் முதலில் வெளிநாட்டு நோயாளிகளையே அதிகம் குறிவைத்து செயல்பட்டதாகவும் காவலர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், மருத்துவ சுற்றுலா நிறுவனத்தை சாகர்பூர் மற்றும் குர்கானில் நடத்தி வந்ததாகக் கணக்கு காட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் கொடுத்த முகவரியில், ஒரு வீடுதான் இருந்துள்ளது என்பதும் அங்கு ஒரு குடும்பத்தினர் வசித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போலியான மருத்துவ சுற்றுலா நிறுவனத்தின் இணையதளத்தில், புற்றுநோய், உறுப்புமாற்று அறுவைசிகிச்சை, நரம்பியல் மருத்துவம், இதயநோயியல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது நிறுவனத்தில் 20 கிளைகள் மற்றும் 80 மருத்துவர்கள் இணைந்திருப்பதாகவும் 10 மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு நீரஜ் தலைமை நிர்வாகி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com