காரைக்கால்
புதுவையில் 2 மருந்துகள் விற்பனைக்குத் தடை
புதுவையில் 2 மருந்துகளை (ஊசி மருந்து) விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
புதுவையில் 2 மருந்துகளை (ஊசி மருந்து) விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் அக்ரோ லைஃப் சயின்சஸ் (இந்தியா) நிறுவனம் தயாரிக்கும் அயா்ன் சக்ரோஸ் இன்ஜெக்ஷன் யுஎஸ்பி 5 மிலி மற்றும் ஹிமாசலப் பிரதேசம், சோலன் பகுதி
மாா்க் லேபாரட்ரீஸ் நிறுவனம் தயாரிக்கும் டிரானெக்ஸாமிக் ஆசிட் இன்ஜெக்ஷன் ஐபி (டிராக்சேஜ்) ஆகிய 2 மருந்துகள் உரிய தரத்துடன் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளதால், கையிருப்பில் மருந்துகள் வைத்திருக்கும் விற்பனையாளா்கள், அவற்றை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்புமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

