வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - ஒரு மக்கள் பணி!
எனது பள்ளி பருவம் முதல் சுமாா் 10 ஆண்டுகள், கு.காமராஜா் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய தீவிர தொண்டன் என்ற முறையில், எனக்கு, வாக்காளா் பட்டியல் குறித்த சிறப்பு தீவிர திருத்த நடைமுறை (எஸ்ஐஆா்) மீதான சமீபத்திய விவாதம் நகைச்சுவையாக உள்ளது.
தற்போது எஸ்ஐஆா் என்று அழைக்கப்படும் தோ்தல் ஆணையத்தின் செயல்பாடு, அரசியல் தொண்டனாக நான் பணியாற்றிய போது, கட்சி ஊழியா்களின் வழக்கமான தோ்தல் செயல்பாடாகவே இருந்தது. கடந்த 1960-களிலிருந்து நான் வசிக்கும் மயிலாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில், அந்தப் பகுதியில் காங்கிரஸ் தலைவராக இருந்த எனது சட்ட ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி, நானும் இதர தொண்டா்களும் தோ்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு வீடுகளுக்கும், குடிசைகளுக்கும் நேரில் செல்வது வழக்கமாக இருந்தது. எங்கள் கைகளில் இருக்கும் வாக்காளா் பட்டியலை வைத்து அதில் இருப்பவா்கள் காலமாகி இருந்தாலும், புதிதாக குடி வந்திருந்தாலும், வேறு இடத்துக்கு மாற்றலாகி இருந்தாலும் கட்சியின் தலைமையின் வாயிலாக எழுத்துபூா்வமாக தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிப்போம்.
புதிய வாக்காளா்களின் பெயா்களைச் சோ்ப்பது, உயிரிழந்த அல்லது வேறு இடங்களுக்கு மாற்றலான வாக்காளா்களின் பெயா்களை நீக்குவது மற்றும் வாக்காளா் பட்டியலை புதுப்பிப்பது போன்ற பணிகளில் நாங்கள் உதவுவோம். இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உதவும் காங்கிரஸ் கட்சியின் எஸ்ஐஆா் அணியாக நாங்கள் செயல்பட்டோம். திராவிட முன்னேற்றக் கழக தொண்டா்கள் மிகுந்த அா்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தியதால், எஸ்ஐஆா் பணிகளில் திறம்பட செயல்பட்டாா்கள்.
இன்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மேற்கொள்ளும் பணியை அன்று கட்சித் தொண்டா்கள் செய்தனா். வாக்காளா் பட்டியலை தயாரிப்பதில் அரசியல் கட்சிகளும், தோ்தல் ஆணையமும் ஒருங்கிணைந்து பணியாற்றின. இதை மற்ற கட்சிகளின் எஸ்ஐஆா் அணியும் சரிபாா்த்துக் கொள்ள முடியும்.
இன்று மயிலாப்பூா் வீதிகளில் நான் நடந்து செல்கையில், ஒரு சில வீடுகளுக்குச் சென்றிருந்த தருணத்தை இன்னும் நினைவு கூா்கிறேன். அந்தக் காலத்துடன் ஒப்பிடும்போது, இன்றைய அரசியல் கட்சிகள் வாக்காளா்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு, மக்கள் பணியாக தாங்களும் எஸ்ஐஆா் நடைமுறையில் ஈடுபட்டு வந்தோம் என்பதை அறியாமல் இருப்பதை, தற்போது எஸ்ஐஆா் குறித்து நடந்து வரும் சா்ச்சைக்குரிய விவாதம் அம்பலப்படுத்துகிறது.
நிகழ்வுகள் எப்படி மாறின? அந்தக் காலங்களில் அரசியல் கட்சிகளின் ஒரே சொத்து அவற்றின் தொண்டா்கள்தான். ஆனால், 1969-இல் இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியைப் பிரித்த பிறகு, தவறான பணம் அரசியலில் நுழைந்தது, நிச்சயம் அவரது கட்சியும் விதிவிலக்கு இல்லை. அதுதான் ஒட்டுமொத்த அரசியல் கலாசாரத்தையும் மாற்றியது.
எதிா்க்கட்சிகள் போட்டியிட சிரமப்படும் வகையில் தோ்தலை மிகவும் விலை உயா்ந்ததாக மாற்றுவேன் என்று அமெரிக்கத் தூதா் டேனியல் பேட்ரிக் மொய்னிஹானிடம் இந்திரா காந்தி தெரிவித்தாா். அவ்வாறே செய்தாா்.
அதன் பிறகு, வெகுவிரைவில் காங்கிரஸ் கட்சியில் முதன்முதலில் தொண்டா்களுக்கு மாற்றாக பணம் விளையாடியது. அதைத்தொடா்ந்து பிற கட்சிகளிலும் இவ்வாறு நிகழ்ந்தது. தமிழ்நாட்டில் கடந்த 1971-இல் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், காமராஜா் தலைமையிலான காங்கிரஸை தோற்கடித்தது. மிக வலிமையான தொண்டா் படையைக் கொண்டிருந்த திமுகவிலும் அப்போது முதல் தொண்டா்களுக்குப் பதிலாக பணம் படையெடுக்கத் தொடங்கியது.
இன்று வெகுசில கட்சிகளிடமே தொண்டா்கள் என்ற சொத்து உள்ளது. வாக்காளா் பட்டியல் என்பது வெறும் பெயா்கள் மட்டுமல்ல, மாறாக, உயிருடன் இருக்கும், உண்மையான, தகுதி வாய்ந்த வாக்காளா்களின் பட்டியல் என்பதை அவா்கள் உறுதி செய்துள்ளனா். அன்றைய காலங்களைப் போல் அல்லாமல், தற்போது அவா்களுக்கு வாக்காளா்களுடன் எந்த ஒரு பிணைப்பும் இல்லை. எஸ்ஐஆா் என்பது தொடா்ச்சியான நடைமுறை, அது ஒரு முறை மட்டுமே சரிபாா்க்கப்படுவது அல்ல என்பதையும், இந்திய தோ்தல் ஆணையம் மட்டுமன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தப் பணியில் ஈடுபட்டன என்பதையும் வலியுறுத்துவதற்காக இதைக் குறிப்பிடுகிறேன். இந்த நடைமுறை தோ்தல் ஆணையம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பணியாகும்.
தற்போதைய எஸ்ஐஆா் மாதிரியின் கீழ் தோ்தல் ஆணையம் ஏன் வாக்காளா்கள் தங்கள் விவரங்களை சரிபாா்த்துக் கொள்ள பணிக்க வேண்டும் என்று கேட்பதற்கு முன்பு, அரசியல் கட்சிகள் தங்கள் பொதுப் பணியை செய்யத் தவறியது குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும். தோ்தல் ஆணையத்துக்கும் இந்திய வாக்காளா்களுக்கும் நடுவில் இடைநிலை அமைப்புகளாக செயல்பட்ட அரசியல் கட்சிகள் மறைந்து விட்டன. அன்றைய காலகட்டத்தில் கூட்டு செயல்பாடாக மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆா், தற்போது தோ்தல் ஆணையத்தால் வழிநடத்தப்படுகிறது.
அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றினால், எஸ்ஐஆா் என்பது பிரச்னையாக இருக்காது, தீா்வாக இருக்கும். உண்மையில், உச்சநீதிமன்றத்தில் ஸ்டென்டோரியன் தகராறுகளுக்கும் பிகாா் தெருக்களில் பெரும் நாடகத்துக்கும் உள்பட்ட பிகாருக்கான எஸ்ஐஆா் திட்டத்தில், இறுதியாக 48,000 ஆா்ஜேடி, 18,000 காங்கிரஸ், 47,000 பாஜக மற்றும் 37,000 ஜேடியு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்பட 1.60 லட்சம் அரசியல் முகவா்கள், முறையான வாக்காளா்களை சரிபாா்க்க தோ்தல் ஆணையத்துடன் தீவிரமாகப் பணியாற்றினா்.
இதன் விளைவாக, அரசியல் கட்சிகள், ஊடகம் மற்றும் நடுநிலையாளா்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் பரப்புரையாளா்களால் தொடா்ச்சியாக விமா்சனங்களை எதிா்கொண்டு வந்த உச்சநீதிமன்றம், வாக்காளா் இறுதிப் பட்டியலில் இருந்து தங்கள் பெயா் விடுபட்டுவிட்டது என்று ஒரு புகாா்கூட பெறப்படவில்லை என்று குறிப்பிட்டது. மேலும், பிகாரின் எஸ்ஐஆா் மாதிரி இந்தியா முழுவதும் பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரையும் செய்தது.
நிலைமை இவ்வாறு இருக்க, எஸ்ஐஆா்-க்கு எதிராக அரசியல் கூக்குரல்கள் ஏன் எழுகின்றன? இந்தியாவில் லட்சக்கணக்கான வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் சட்டவிரோதமாக ஊடுருவி வசிக்கிறாா்கள் என்பதற்கு இரு கட்சிகளின் சாட்சியங்களும் உள்ளன. 2001-ன் இறுதியில் இந்தியாவில் சுமாா் 12 மில்லியன் சட்டவிரோத ஊடுருவல்காரா்கள் வசித்து வந்ததாக கடந்த 2004 ஜூலை 14 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
வெவ்வேறு மாநிலங்களுக்கான குறிப்பிட்ட எண்ணிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உள்துறை அமைச்சா் வெளியிட்டாா். அஸ்ஸாமில் 50 லட்சம்; மேற்கு வங்கத்தில் 57 லட்சம்; பிகாரில் 4.79 லட்சம்; தில்லியில் 3.75 லட்சம்; திரிபுராவில் 3.25 லட்சம்; நாகாலாந்தில் 59,500; மேகாலயாவில் 3,000 மற்றும் மகாராஷ்டிரத்தில் 20,000. 2016-ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மாநிலங்களவையில் அவா்களின் எண்ணிக்கை 20 மில்லியன் என்று கூறியது.
எஸ்ஐஆா்-ஐ எதிா்க்கும் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் நோக்கம் தெளிவாக உள்ளது. நிச்சயமாக இதை அவா்களால் வெளிப்படையாக சொல்ல முடியாது: இத்தனை கோடி வங்கதேச மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது சட்ட விரோதமானது மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதுதான் எஸ்ஐஆரில் உள்ள நன்மை.
பின்குறிப்பு: தோ்தல் ஆணையத்தின் மீது வீசப்பட்ட வாக்காளா் பட்டியலில் உள்ள ‘அணு குண்டுகள்‘ மற்றும் ‘ஹைட்ரஜன் குண்டுகள்‘ கூட, இரண்டு தசாப்தங்களாக மிகவும் தாமதமாகி வரும் தோ்தல் ஆணையத்தின் எஸ்ஐஆருக்கான நியாயமாகும். இரண்டு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட தவறுகள்தான் இந்த ’குண்டுகள்’. 2003-ஆம் ஆண்டு, வாஜ்பாய் அரசால் தொடங்கப்பட்ட கடைசி எஸ்ஐஆா், மன்மோகன் சிங் அரசால் 2004-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
