/

அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2017!

தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2017

News image
Updated On :7 ஜூலை 2017, 8:29 am

DIN

தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2017!

நிகழும் திருவள்ளுவராண்டு 2048 ஆனித் திங்கள் 30 ஆம் நாள் (14-07-2017) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் 3-ஆவது அரியலூர்ப் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற உள்ளது. 

மாண்புமிகு தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்று விழாவினை தொடங்கிவைத்துப் பேருரையாற்றுவார். 

மாண்புமிகு தமிழ்நாடு அரசுத் தலைமைக் கொறடா திரு தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்கள் தலைமையுரையாற்றுவார். 

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) திரு சே.தனசேகரன் அவர்கள் தொடக்கவுரையாற்றுவார். அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முனைவர் அபிநவ் குமார் இ.கா.ப. அவர்கள் தலைமை விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்குவார். 

தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் தலைவர் திரு சீனி பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை ஏற்பார்.

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

குத்துவிளக்கு ஏற்றுதல்

நினைவுப்  பரிசு வழங்குதல்

தொடக்கவுரை

தலைமையுரை

வாழ்த்துரை

விழாப் பேருரை

நன்றியுரை

நாட்டுப்பண்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.