தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற இடம் நியூயார்க். சமீபத்தில் இங்கு மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடந்தேறி உள்ளது. இதில் எட்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர், பதினைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் பாதசாரிகள் செல்லும் ரோட்டில் டிரக் ஓட்டி வந்த மர்மநபர் இத்தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தின் அருகே தான் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் வீடு இருக்கிறது. குவான்டிகோ (Quantico) எனும் பிரபல தொலைக்காட்சித் தொடரில் தற்போது நடித்து வருகிறார் பிரியங்கா. படப்பிடிப்பு முடித்து வீடு திரும்புகையில் சைரன் ஒலி கேட்டு அதிர்ந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ‘இது அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயம், அதுவும் என் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி கண் முன்னால் இத்தகைய சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது’ என்று பிரியங்கா தனது டிவிட்டரின் கூறியுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு தனது இரங்கல் தெரிவித்துள்ளார் பிரியங்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


