
ஜெயலலிதாவுடன் யாரிந்த இரட்டைக் குழந்தைகள்? வைரலாகும் புகைப்படம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாக ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று பிறந்தனர்.
குழந்தைகள் பிறந்த அன்று மருத்துவமனைக்கே சென்று அங்குள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று, கிருஷ்ணபிரியா தன் குழந்தைகளின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து ‘அன்று என் கருவறையில் இருந்த இரட்டைக் குழந்தைகளின் பிறந்த நாளும் இன்றே... மறக்க இயலாத பல நினைவுகளைத் தன்னுள் அடக்கிய தினம் இத்தினம்’ என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
https://t.co/yT1f1ErJ0R pic.twitter.com/XAQVzkAbWV
mdashKrishnapriyaKrishnapriyaJkp) December 25, 2017
ஜெயலலிதா கிருஷணப்பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் போது, வளையல் அணிவிக்கும் புகைப்படம், இரட்டைக் குழந்தைகளுடனான புகைப்படம் ஆகியவை வைரலானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





