சங்கராபுரம் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை எலி இறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரைப் பருகிய மாணவர்களில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் திங்கள்கிழமை மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரைப் பருகினர். தண்ணீர் பருகிய சிறிது நேரத்தில் மாணவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தபோது அதில் எலி ஒன்று செத்து மிதந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள்அருகில் இருந்த ஆலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களான 10-ஆம் வகுப்பு பயிலும் பிரபாகரன், சாந்தகுமார், பிரகாஷ், கோபிநாத், அய்யப்பன், பாலாஜி, அசோக், சதீஷ், 9-ஆம் வகுப்பு மாணவர் சந்துரு, 8-ஆம் வகுப்பு மாணவர்கள் கோபாலகிருஷ்ணன், பரத், கோகுல், பாலாஜி, மணிகண்டன், பிரசாத், பிரகாஷ், அன்பழகன், 7-ஆம் வகுப்பு மாணவர் மனோ, 6-ஆம் வகுப்பு மாணவர் சீமலேஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பதற்றத்துடன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து மாணவர்களை பார்த்தனர். பின்னர், மருத்துவரிடம் மாணவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இதற்கிடையே, சுகாதாரத் துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து எலி இறந்து கிடந்த தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தனர். பின்னர், அந்தத் தொட்டியை சுத்தப்படுத்த அறிவுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.34! 6 காசுகள் உயர்வு!

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
காதல் ஹீரோ - மாஸ் ஹீரோவான விஜய்! பாக்ஸிங் சாம்பியன் பத்ரி!
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly



