‘காலா’ பைரவருக்கு 2 கோடி ரூபாய் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

காலா திரைப்படத்தில் ரஜினியுடன் ஒரு நாயும் நடித்திருப்பதை படத்தின் போஸ்டர்களில் கண்டிருப்பீர்கள். அந்த நாயின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? 2 கோடி ரூபாய்
‘காலா’ பைரவருக்கு 2 கோடி ரூபாய் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!
Published on
Updated on
1 min read

காலா திரைப்படத்தில் ரஜினியுடன் ஒரு நாயும் நடித்திருப்பதை படத்தின் போஸ்டர்களில் கண்டிருப்பீர்கள். அந்த நாயின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? 2 கோடி ரூபாய் என்கிறார் அதன் தற்போதைய உரிமையாளரும், பயிற்சியாளருமான சைமன். ஆனால், எவ்வளவு கொடுத்தாலும் மணியை யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை சைமன். தெருநாயாக தான் கண்டெடுத்த மணியை திரைப்படங்களில் நடிக்குமளவுக்கு பழக்கப்படுத்த சைமன் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார். முதன்முதலில் அந்த நாயைக் கண்டெடுத்த போது அது என்னைக் கடித்து விட்டது. ஆனாலும், அதன் மீதான ப்ரியம் காரணமாக நான் அதனுடன் தொடர்ந்து பழகி அதன் நட்பைப் பெற்றேன். இப்போதெல்லாம் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாகத் தினமும் அதன் முகத்தில் தான் நான் விழிக்கிறேன். அந்த அளவுக்கு அதன் மீதான அன்பு பெருகிவிட்டது.

காலா படத்தில், படம் முழுக்க மணி சூப்பர் ஸ்டாருடன் நடித்தது. திரைப்படத்தில் காலாவாக ரஜினி மணி என்று குரல் கொடுத்தால் போதும் மணி ஓடிப்போய் காலாவின் ஜீப்பில் ஏறி அவரது அருகில் அமர்ந்து விடும். அந்த அளவுக்கு ரஜினியின் குரலுக்கு அது கட்டுப்பட்டிருந்தது. என்று மகிழும் சைமன், காலா திரைப்படத்துக்காக இயக்குனர் பா.ரஞ்சித் கிட்டத்தட்ட 30 நாய்களுக்கும் மேல் தேர்வு நடத்தி பரிசோதித்துப் பார்த்தார். முடிவில் மணி தேர்வானது. காலாவில் ரஜினியின் வளர்ப்பு நாயாக நடித்ததால் ஒரே இரவில் மணியின் விலை 2 கோடி ரூபாயாகி விட்டது. அதோடு காலாவைத் தொடர்ந்து மேலும் மூன்று திரைப்படங்களில் நடிக்க மணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் என்னிடம் மணியை விலைக்கு கேட்டு வரும் போது, எனக்கு பணம் முக்கியமில்லை, என் மணி தான் முக்கியம் என்று சொல்லத் தோன்றுகிறது. மணி இப்போது எனது குடும்பத்தில் ஒருவன் என்கிறார் சைமன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com