எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பைலட், அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை: ராஜஸ்தான் காங். எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

ராஜஸ்தானில் சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News image
சச்சின் பைலட்
Updated On :14 ஆகஸ்ட் 2020, 10:26 am

ANI

ராஜஸ்தானில் சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜஸ்தானில் வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டப்படும் நிலையில்,  ஜெய்சால்மரில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் அசோக் கெலாட் கூட்டியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், கட்சியின் மேலிடத்திடம் அதிருப்தியாளர்களுக்கு ஆதரவாகத் தாம்  நிற்கப் போவதில்லை என்று மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவிநாஷ் பாண்டே தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜஸ்தானிலுள்ள காங்கிரஸ் அரசின் நிலைமை சிக்கலாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.