புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தடையை மீறி போராட்டம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Updated On :18 டிசம்பர் 2020, 2:25 pm

DIN

அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, 23 நாள்களாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் திமுக கூட்டக் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி தர மறுத்த நிலையில், தடையை மீறி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

போராட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, காங்கிரஸ் தங்கபாலு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், கூட்டணிக் கட்சித் தலைவா்கள், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட கூட்டணிக் கட்சி மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.