நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கரோனா

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங்
Updated on
1 min read

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் (வயது 30). இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, மே டே என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுவரும் இவருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,

“எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன். நான் சுயதனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இவர் தமிழில் தீரன், தேவ், என்.ஜி.கே. உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com