

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும் என இந்திய தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.
தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து, சென்னையில் இரண்டாவது நாளாக இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.
ஆலோசனை முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்குமேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த வசதி செய்து தரப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளம், கழிவறை, மருத்துவ வசதி செய்து தரப்படும். விருப்பப்படும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதியைப் பயன்படுத்தலாம்” எனவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.