எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இணைய வகுப்பைப் பார்க்க முடியவில்லையே, கேரளத்தில் மாணவி தற்கொலை

கேரளத்தில் இணையவழி வகுப்பைப் பார்க்க முடியாததால் பத்தாம் வகுப்பு மாணவி தீவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.

News image
Updated On :2 ஜூன் 2020, 7:12 am

DIN

கேரளத்தில் இணையவழி வகுப்பைப் பார்க்க முடியாததால் பத்தாம் வகுப்பு மாணவி தீவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.

கேரளத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இணையவழி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய இந்த மாணவி, மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரியில் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்தார். 

தந்தை கூலித் தொழிலாளி. கரோனா கால பொது முடக்கம் காரணமாக இவருடைய வீட்டில் பழுதாகிவிட்ட தொலைக்காட்சிப் பெட்டியைப் பழுதுபார்க்க முடியவில்லை.

இந்த நிலையில் திங்கள்கிழமை இணையவழி வகுப்பு தொடங்கியபோது, செல்லிடப் பேசியிலும் பேட்டரி சார்ஜ் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த மாணவியால் வகுப்பைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

இதைத் தொடர்ந்து மிகவும் சோர்வாகக் காணப்பட்ட மாணவி, வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். மகளைக் காணவில்லையே எனத் தேடிச் சென்றபோதுதான், வீட்டுக்கு அருகே மண்ணெண்ணெய் ஊற்றி அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தொலைக்காட்சிப் பெட்டியோ, செல்லிடப் பேசியோ இல்லாத மாணவ, மாணவிகளுக்கெனத் தனி ஏற்பாடுகள் செய்திருந்தால் இதுபோன்ற துயர சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்று உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆபித் ஹுசைன் தங்கல் குறிப்பிட்டார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி, நன்றாகப் படிக்கிறவர். கரோனாவால் வேலையுமின்றிக் கையில் பணமுமில்லாததால் டி.வி.யைப் பழுதுபார்க்க முடியாமல் போய்விட்டது என்றும் தங்கல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.