கம்பம்: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முல்லை பெரியாறு அணையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வரும் வியாழக்கிழமை துணைக்கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த மூவர் குழுவிற்கு உதவியாக துணைக்கண்காணிப்பு குழு என்ற ஐவர் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற் பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை செயற் பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.
கடந்த ஜனவரி 22ல் அணையின் நீர்மட்டம், 119.40 அடியாக இருந்தபோது துணைக்குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப்பின் கேரளத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 112.40 அடியாக உள்ள நிலையில், அணையில் செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து துணைக்கண்காணிப்பு குழுவினர் வரும் வியாழக்கிழமை பெரியாறு அணையில் ஆய்வுகள் நடத்த உள்ளனர்.
மேலும் மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து, வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்தும் குழுவினர் ஆய்வு செய்து, அதன்பிறகு குமுளி 1ஆம் மைலில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


