அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஈரோட்டில் ஜே. சுத்தானந்தன் நினைவு நாள்

ஈரோட்டில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மறைந்த தலைவரான ஜெ. சுத்தானந்தன் நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டது.

News image
ஜெ. சுத்தானந்தன் சிலைக்கு மாலை அணிவித்த செங்குந்த மகாஜன சங்கத்தினர்
Updated On :27 ஜனவரி 2024, 4:50 pm

DIN


ஈரோடு: ஈரோட்டில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மறைந்த தலைவரான ஜெ. சுத்தானந்தன் நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டது.

தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்டக் கிளை சார்பில் ஜெ. சுத்தானந்தனின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

விழாவையொட்டி ஈரோடு செங்குந்தர் பள்ளியில் உள்ள சுத்தானந்தன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்குத் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். செங்குந்தர் கல்விக் கழகச் செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். விகோப் டெக்ஸ் தலைவர் யுனிவர்சல் நந்தகோபால், வி.ஜி.பி. வேலு, அரசு வழக்கறிஞர் அருள்முருகன், கிருஷ்ணசாமி, வஜ்ரவேல், சேலம் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

செங்குந்தர் சங்க நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.