ஐரோப்பாவில் 15 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு! பலி - 1.4 லட்சம்!!
ஐரோப்பாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சம்.


ஐரோப்பாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சம்.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பா கண்டத்தில் சனிக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் - 15,06,853. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,40,260. பாதிக்கப்பட்டவர்களில் 9.3 சதவிகிதத்தினர் உயிரிழக்கின்றனர்.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் 34,22,595 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி - 2,40,338 (7 சதவிகித உயிரிழப்பு).
பல நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சோதனைகளைச் செய்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...