சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கோவை மாநகரில் சூறாவளிக் காற்றுடன் மழை

கோவை மாநகரில் வியாழக்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.

News image
Updated On :28 மே 2020, 1:43 pm

DIN

கோவை: கோவை மாநகரில் வியாழக்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.

கோவையில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் 90 முதல் 98 டிகிரி பாரன்ஹீட் வரை வெயிலும், மாலை நேரங்களில் மழை மேகங்களுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. மாவட்டத்தின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.45 மணி முதல் கோவை புறநகர், மாநகரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

மாநகரில் பீளமேடு, சிங்காநல்லூர், காந்திபுரம், புலியகுளம், கணபதி, ராமநாதபுரம், போத்தனூர், உக்கடம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகரில் அன்னூர், சூலூர், தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த சூறாவளிக் காற்று, இடி - மின்னலுடன் மழை பெய்தது.

நீண்ட நாள்களுக்கு பிறகு கோவையில் அதிக அளவில் மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.