
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் தடுக்கப்பட்ட பகுதிகளுக்கு தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள விதிவிலக்குகள் எதுவும் பொருந்தாது அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று பரவியுள்ள நிலைமையைப் பொருத்து மத்திய நல்வாழ்வுத் துறையின் வழிகாட்டுதலின்படி பாதிக்கப்பட்ட மற்றும் தடுக்கப்பட்ட பகுதிகளை மாநில, மத்திய ஆட்சிப் பகுதி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் வரையறுக்கின்றன.
புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எதுவும் இந்தப் பகுதிகளில் நடைமுறைக்கு வராது.
அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து வேறெதற்காகவும் இந்தப் பகுதிகளுக்குள் யாரும் நுழையவோ, வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கெனவே நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் வழக்கம் போல கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.