ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மனைவியை கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் 

கிருஷ்ணகிரியில் மனைவியை கொலை செய்த கணவர் ஒசூர் நகர காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை  சரணடைந்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஏப்ரல் 2021, 4:05 am

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மனைவியை கொலை செய்த கணவர் ஒசூர் நகர காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை  சரணடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள பிராமின் தெருவைச் சேர்ந்தவர் சென்னபசப்பா(44) அங்குள்ள கோவிலில் குருக்கள் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌரம்மா(40).  இந்த தம்பதிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

கௌரம்மாவுக்கும் வேறு ஒரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். இதை கணவன் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் மனைவியை வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.என். போடூர் பஸ்வெஸ்வரப்பா கோயிலுக்கு அழைத்துச் சென்று, கோயிலுக்கு பின்புறம் வைத்து கொலை செய்துள்ளார் கணவர் சென்னபசப்பா.

பின்னர்,  ஒசூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்த சென்னபசப்பாவை அழைத்து வந்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த நிகழ்வு இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.