ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குச்சனூர் சனீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு தடை: போலீசார் குவிப்பு

தேனி மாவட்டம் குச்சனூர் அருள்மிகு சனீஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News image
குச்சனூர் அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:23 am

DIN


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் குச்சனூர் அருள்மிகு சனீஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும்.  கடந்த 3 வாரம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அர்ச்சனைகள் தவிர்க்கப்பட்டன.

இந்நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் பல்வேறு திருவிழா நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவருதால் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து குச்சனூர் சனீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத 4 ஆவது சனிக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் வருகை இருக்கும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் கோயில் நுழைவுப் பகுதி கோயில் நிர்வாகம் சார்பில் இரும்பு தகரத் தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.