இந்தியாவில் 500 சுட்டுரைக் கணக்குகள் முடக்கம்
விதிமுறைகளை மீறியதாக இந்தியாவில் 500 சுட்டுரைக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


விதிமுறைகளை மீறியதாக இந்தியாவில் 500 சுட்டுரைக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆயித்திற்கும் அதிகமானோரின் சுட்டுரை கணக்குகளை முடக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில், இதுவரை 500 சுட்டுரை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறான கருத்துகளையும், தகவல்களையும் பரப்பியதாக சுட்டுரை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் 1,178 சுட்டுரை கணக்குகளை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டிராக்டர் பேரணி குறித்தும் அவதூறான கருத்துகள் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எனினும், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் கணக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...