
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ரது.
அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
ஆளுநருடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இந்த சந்திப்பின் போது தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.