மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சுவேந்து அதிகாரி சந்திப்பு

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.

News image
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சுவேந்து அதிகாரி சந்திப்பு
Updated On :1 ஜூலை 2021, 3:49 pm

DIN

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவினர் மீது திரிணமூல் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் நாளை மறுதினம் (ஜூலை 2) மாநில சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசிய பாஜக தலைவரும், மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி  மாநில அரசியல் நிலைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடப்பதாக எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் எழுப்புவது குறித்தும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுடன் சுவேந்து அதிகாரி சந்தித்து பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.