ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 648 கி. தங்கம் பறிமுதல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 648 கி. தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 648 கி. தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்த 27 வயதான பயணி ஒருவர் 648 கி. தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கத்தைக் கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...