திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நாட்டில் புதிதாக 41,649 பேருக்கு தொற்று: 593 பேர் உயிரிழந்தனர்

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 41,649 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:48 am

DIN

புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 41,649 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 593 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் பலா் செயல்படுவதால் தொற்று அதிகரித்து வருகிறது. 

கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு மீண்டும் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் சனிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,16,13,993 -ஆக உயா்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது தினசரி பாதிப்பு விகிதம் 2 சதவிகிதமாக உள்ளது. 

37,291 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,07,81,263 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,08,920-ஆக உள்ளது. இLனால் நாட்டில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரித்துள்ளது.  மொத்த வழக்குகளில் 29 சதவிகதமாக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 97 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 593 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,23,810-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1 சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்புகளில் மகராஷ்டிரத்தில் 231 பேரும், கேரளத்தில் 116 பேரும் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் நிகழ்ந்த உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் 132566 பேரும், கர்நாடகத்தில் 36525 பேர், தமிழ்நாட்டில் 34050 பேர், தில்லியில் 25052 பேர், உத்தரபிரதேசத்தில் 22756 பேர், மேற்கு வங்கத்தில் 18128 பேர் மற்றும் பஞ்சாபில் 16292 பேர் என  மொத்தம் 4,23,810 பேர் இறந்துள்ளனர். 

நாடு முழுவதும் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மே 4-ஆம் தேதி 2 கோடியைக் கடந்த நிலையில், ஜூன் 23-ஆம் தேதி 3 கோடியைக் கடந்தது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 46,15,18,479 கோடியாக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 46,64,27,038 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் 17,76,315 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.