/

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 91,702-ஆக குறைவு

இந்தியாவில் கரோனா தொற்றினால் வெள்ளிக்கிழமை காலை வரையிலான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,702 -ஆக குறைந்துள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2021, 10:47 am

DIN

இந்தியாவில் கரோனா தொற்றினால் வெள்ளிக்கிழமை காலை வரையிலான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,702 -ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து 18-ஆவது நாளாக தினசரி பாதிப்பு வீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக, 4.49 சதவிகிதமாக  உள்ளது. தொடா்ந்து நான்காவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தொடா்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 3,403 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 3,63,079 போ் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 19 -ஆம் தேதி 4552 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச தினசரி உயிரிழப்பாக இதுவரை இருந்து வந்தது. 

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கைத் தொடா்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 11,21,671 -ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட இந்த எண்ணிக்கை 11-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

தொடா்ந்து 29-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,34,580 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள். கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,281 ஆக குறைந்துள்ளது. 

இதுவரை மொத்தம் 2,77,90,073 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி குணமடைந்தவா்களின் விகிதம் 94.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 29-ஆவது நாளாக தினசரி புதிய தொற்று பாதிப்புகளை விட, குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசியளவில் குணமடைந்து வருபவர்களின் வீதம் 94.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர தொற்று உறுதி வீதம் 5.14 சதவீதமாக உள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,44,131 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,42,42,384 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 24,60,85,649 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.