தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்க மேலாளர் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவு சங்கத் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீஸார் இன்று (சனிக்கிழமை) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
Updated On :19 ஜூன் 2021, 1:56 pm

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவு சங்கத் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீஸார் இன்று (சனிக்கிழமை) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் நகர் சின்னக்காஞ்சிபுரம் சித்தி விநாயகர் கோயில் பூந்தோட்டம் தெருவில் வசித்து வருபவர் முனியப்பன்(58). இவர் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள டாக்டர்.கலைஞர்.கருணாநிதி பட்டு கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல பணிக்கு வந்த முனியப்பன் அலுவலகத்தின் 2 வது மாடிக்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பணி மேற்கொள்ள சங்க துப்புரவுப்பணியாளர் மாடிக்கு சென்ற போது அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தத் தகவலை விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன், சார்பு ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

குடும்பத்தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.