/

மேட்டூர் அணை நீர்மட்டம் 92.12 அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 92.84 அடியிலிருந்து 92.12 அடியாக சரிந்தது. 

News image
மேட்டூர் அணை நீர்மட்டம் 92.12 அடியாக சரிவு
Updated On :28 ஜனவரி 2024, 3:26 am

DIN

மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 92.84 அடியிலிருந்து 92.12 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 466 கன அடியிலிருந்து 443 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 55.10 டிஎம்சி -ஆக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஜூன் 12 -ஆம் தேதி 96.81 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 92.12 அடியாக சரிந்துள்ளது. 7 நாள்களில் அணையின் நீர்மட்டம் 4.69 அடியாக சரிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.