இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண உதவிப் பொருள்கள்

கருணாநிதியின் நினைவு இல்லம் முன்பாக முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு, கரோனா கால நிவாரண உதவியாக, அரிசி, மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டது.

News image
திருக்குவளையில் திமுக சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண உதவிப் பொருள்கள்
Updated On :19 ஜூன் 2021, 6:55 am

DIN

நாகை மாவட்டம், திருக்குவளையில் பிறந்து, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு இல்லம் முன்பாக முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு, கரோனா கால நிவாரண உதவியாக, அரிசி, மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டது.

நாகை தெற்கு மாவட்ட செயலாளர் என்.கெளதமன் தலைமை வைகித்து, நிவாரண உதவிப் பொருள்களை வழங்கினார்.  ஒன்றிய கழக செயலாளர்கள் கீழையூர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், தலைஞாயிறு மகா.குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் திமுக மாவட்ட பிரதிநிதியும், திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவருமான இல.பழனியப்பன், வேளாங்கண்ணி பேரூர் கழக பொறுப்பாளர் மரியசார்லஸ் ,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சோ.பா.மலர்வண்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் இரா.மாரிமுத்து,மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆர்.ஏ.டி.அண்ணாதுரை  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இந்த நிவாரண உதவி பொருள்கள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.