மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 88.98 அடியிலிருந்து 88.61 அடியாக சரிந்தது.


மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 88.98 அடியிலிருந்து 88.61 அடியாக சரிந்தது.
வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 8,035 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை 5455 கனஅடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 51.07டிஎம்சி -ஆக உள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு சரிந்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டு நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,455 கன அடியாக குறைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...