அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.99-ஐ தாண்டியது

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை பெட்ரோல் விலை ரூ.99 -ஐ தாண்டியது.

News image
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.99-ஐ தாண்டியது
Updated On :28 ஜனவரி 2024, 3:30 am

DIN


நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை பெட்ரோல் விலை ரூ.99 -ஐ தாண்டியது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஐந்து மாநில பேரவைத் தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலையை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. 

சென்னையில் வெள்ளிக்கிழமை பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.98.88 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.89 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.99 -ஐ தாண்டி உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.99.19 ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரிக்கப்பட்டு டீசல் ஒரு லிட்டர் ரூ.93.23 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. 

தலைநகர் தில்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.98.11-ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.88.65-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதுபோன்று மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.104.22 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.96.16 ஆகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் ரூ.97.97 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.91.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.