/

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 86.16 அடியிலிருந்து 85.3 5அடியாக சரிந்தது. 

News image
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
Updated On :28 ஜனவரி 2024, 3:31 am

DIN


மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 86.16 அடியிலிருந்து 85.3 5அடியாக சரிந்தது. 

அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 5,948 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை 5130 கன அடியாக சரிந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 47.49 டி.எம்.சி ஆக உள்ளது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.