கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
தேமுதிக எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று
Updated On :20 மார்ச் 2021, 1:20 pm

DIN

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதன்காரணமாக பல்வேறு மாநில அரசுகள் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதால் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எல்.கே.சுதீஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக மக்கள்நீதி மய்யத்தின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.