குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வால்பாறையில் அதிமுக வெற்றி

வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி. முதல் வெற்றியை பதிவு செய்தது அதிமுக. 

News image
தி.க.அமுல்கந்தசாமி
Updated On :2 மே 2021, 9:19 am

DIN

வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி. முதல் வெற்றியை பதிவு செய்தது அதிமுக. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் போட்டியிட்டன. 

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதலே தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை திமுக கூட்டணி 152 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது, அதிமுக கூட்டணி 80 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலுவான நிலையில் உள்ளன. அந்த வகையில், வால்பாறை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிமுக இந்த சட்டப்பேரவை தேர்தலில் தனது முதல் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி  66 ஆயிரத்து 480 வாக்குகள்  பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட  இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆறுமுகம் 53 ஆயிரத்து 309 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். 

தனித்தொகுதியான வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் போட்டியிட்டார். இந்நிலையில் ஆறுமுகத்தை காட்டிலும் அமுல் கந்தசாமி 13 ஆயிரத்து 171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.