திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விளாத்திகுளத்தில் திமுக வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார்.

News image
ஜீ.வி. மார்க்கண்டேயன்
Updated On :2 மே 2021, 9:55 am

DIN

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி. சின்னப்பன் 51,237 வாக்குகளை மட்டுமே பெற்றார். 

 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 1,65,112 வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் ஜீ. வி. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் இருபத்தி நான்கு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அவர் 89,130 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி. சின்னப்பன் 51,237 வாக்குகள் பெற்று 2 ஆவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி 11,697 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

தற்போது திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள ஜீ.வி. மார்க்கண்டேயன், கடந்த 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.