தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அவிநாசி தொகுதியில் அதிமுக ப.தனபால் முன்னிலை

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபால் முன்னிலையில் உள்ளார்.

News image
பேரவைத் தலைவா் தனபால்.
Updated On :2 மே 2021, 3:51 am

DIN


திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபால் முன்னிலையில் உள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி(தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுகிகளுக்கு உள்பட்ட 3,343 வாக்குச்சாவடிகளில் 16 லட்சத்து 44 ஆயிரத்து 85 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டியானது திருப்பூர் எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரியில் 5 அடுக்கு பாதுகாப்புடன் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் சார்பில் 12 ஆயிரம் தபால் வாக்குகள் மாவட்டம் முழுவதும் பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணும் பணியானது ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.  வாக்கு எண்ணிக்கை முதல் சுற்றில்
அவிநாசி தனி தொகுதி அதிமுக வேட்பாளரும், சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபால், திமுக கூட்டணியில் போட்டியிடும் அதியமானைவிட  2,023 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ப.தனபால்(அதிமுக)-4,362 
அதியமான் (திமுக)-2,339

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.