தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆட்சியைப் பிடிப்பது யார்..? திமுக கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுகிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

News image
Updated On :2 மே 2021, 3:44 am

DIN


தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுகிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 

சைதாப்பேட்டை தொகுதி முதல் சுற்று: திமுக  2673  வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. 

திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சந்திரன் 2,000 வாக்குகள் பெற்று முன்னிலை.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பெ.சு.தி சரவணன் 107 வாக்குகள் பெற்று முன்னிலை .

ஆவடி திமுக வேட்பாளர் ஆவடி.சா.மு.நாசர் 500 வாக்குகள் பெற்று முன்னிலை.

செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.கிரி 1,300 வாக்குகள் பெற்று முன்னிலை.

செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் முதல் சுற்றில் 1,463 வாக்குகள் பெற்று முன்னிலை.

செஞ்சி தொகுதியில் முதல் சுற்றில் திமுக வேட்பாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 1,359 வாக்கு பெற்று முன்னிலை.

திருவண்ணாமலை தொகுதியின் முதல் சுற்றில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு 3,300 வாக்குகள் பெற்று முன்னிலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.