தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி,மருத்துவ உபகரணங்கள் வழங்கல் 

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்த

News image

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கிய முன்னாள் மாணவர்கள்.

Updated On :29 மே 2021, 6:36 am

DIN

சீர்காழி: சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி 1996 -ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் சார்பாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு
10 லிட்டர் ஆக்சிஜன் கன்ஸ்ன்டிரேட்டர், ஆக்ஸிபுலோ மீட்டர், ஐஆர். தெர்மாமீட்டர்,பல்ஸ் ஆக்சிமீட்டர், மாஸ்க்-2000 பேட்டரி100 ஆகியவை சீர்காழி அரசு தலைமை மருத்துவர் பானுமதி அவர்களிடம் வழங்கப்பட்டது .

நிகழ்வில் மருத்துவர்கள் அருண்குமார் , மருதவாணன், ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி ,ச.மு.இ மெட்ரிக் பள்ளி நிர்வாக அதிகாரி தங்கவேல், அரிமா சங்கத்தை சேர்ந்த செந்தில் வைரவன் மற்றும் முன்னாள் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டார்கள்.

மேலும் சில பொருள்கள் வாங்கித் தர இருப்பதாகவும் அரசு மருத்துவமனைக்கு தன்னார்வலர்கள் மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி தேவையறிந்து குழுவாக  இயன்ற உதவியை செய்ய வேண்டும் என முன்னாள் மாணவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.