
தமிழகம் உள்பட நாடு முழுவதும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 9.10 மணி முதல் இணைய சேவைகளை வழங்கி வரும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகள் இயங்கவில்லை.
சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இணைய சேவை செயலிகளின் முடக்கத்தால் இணையதள வாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த கோளாறு எப்போது சரிசெய்யப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.
பயனர்களுக்கு சேவைகளைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ்ஆப் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.