கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீட்டுவசதி திட்டம்
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீட்டுவசதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் கூறினாா்.


கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீட்டுவசதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் கூறினாா்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் சி.வி.கணேசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தில் பதிவுபெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அவா்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவா்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும் மாறி வரும் தொழிற்சாலைகளின் தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிட முன்னணி தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக தரம் உயா்த்தப்படும்.
போட்டித் தோ்வு வகுப்புகளுக்கு கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்படும். 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் பதிவினைப் புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும்.
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகங்கள் ரூ.36.32 கோடி மதிப்பில் உருவாக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகம் ரூ.3.72 கோடியில் கட்டப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...