திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் கே.ராமமூர்த்தி(87) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.
திண்டிவனம் கே.ராமமூர்த்தி
திண்டிவனம் கே.ராமமூர்த்தி


சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(87) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது . 

திண்டிவனம் ராமமூர்த்தி 1984 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினர், 1981 முதல் 1984 வரை பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸின் தமிழக தலைவராகவும் இருந்துள்ளார்.

2011 பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். சில மாதங்களிலேயே கட்சியை கலைத்துவிட்டு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டார். 

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com