முட்டை விலை ஒரே வாரத்தில் 55 காசுகள் குறைந்தது!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே வாரத்தில் 55 காசுகள் குறைந்தது. சனிக்கிழமை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.60-ஆக சனிக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே வாரத்தில் 55 காசுகள் குறைந்தது. சனிக்கிழமை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.60-ஆக சனிக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது. 
 
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் தலைவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மற்ற மண்டங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், ஆடி மாதம் என்பதால் மக்களிடையே நுகர்வு குறைந்துள்ளதாலும், நாமக்கல் மண்டலத்தில் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த திங்கள்கிழமை 15 காசுகள், வியாழக்கிழமை 20 காசுகள், தற்போது சனிக்கிழமை 20 காசுகள் வீதம் இந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 55 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.113 ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.80 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com