தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘முதல்வர் வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை': நடிகர் சூர்யா நன்றி

நரிக்குறவர், இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

News image
‘முதல்வர் வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை': நடிகர் சூர்யா நன்றி
Updated On :4 நவம்பர் 2021, 2:00 pm

DIN

நரிக்குறவர், இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசித்துவரும் நரிக்குறவர், இருளர் மக்கள் நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்க கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, “மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “மேலும் எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி” என நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இருளர் சமூக மக்கள் சந்திக்கும் அவல நிலை குறித்து நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.