கோப்புப்படம்
கோப்புப்படம்

நவ.29ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நவம்பர் 29ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நவம்பர் 29ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராடி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவும் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து பேசிய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்றத்தில் புதிய  வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அந்த தினம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், மின்சார சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவும் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்க இடம் ஒதுக்கக் கோரியும் இந்த டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com