அதிகரிக்கும் கரோனா பரவல்: சீனாவில் மேலும் ஒரு மாகாணத்தில் பொதுமுடக்கம் அறிவிப்பு

சீனாவின் ஹீலாங்ஜியாங் மாகாணத்தில் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அந்த நகரில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 40 லட்சம் போ் வசிக்கும் லான்ஷோ நகரில் சமூகக் பரவல் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில் நகரம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு சீனாவின் ஹீலாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள மற்றொரு பெரிய துறைமுக நகரமான ஹெய்ஹே நகரில் கரோனா பரவல் உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. எஜின் பேனர் மற்றும் வடமேற்கு சீனாவின் லான்ஷோவைத் தொடர்ந்து, கரோனா பரவலால் பொதுமுடக்கம் விதிக்கப்படும் மூன்றாவது நகரம் இதுவாகும்.

பொதுமுடக்கத்தின்போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் எனவும் மக்கள் நகரங்களை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தின்போது அத்தியாவசிய காரணங்களில்லாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com