‘நீங்கள் தலையிட வேண்டாம்’: சீனா உடனான மோதலில் அமெரிக்காவிற்கு தைவான் அறிவுறுத்தல்

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில் அமெரிக்க அரசின் தலையீட்டிற்கு தைவான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தைவான் எல்லைப் பகுதிகளுக்குள் சீன அரசு இதுவரை இல்லாத அளவு தங்களது போர் விமானங்கள் மூலம் ஊடுருவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம் சாட்டினாா்.

மேலும் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங்கும் அச்சம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தைவானுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவும் கனடாவும் தைவான் நீரிணைப் பகுதியில் தங்களது போா்க் கப்பல்களை செலுத்தியுள்ளன. இதற்கு தைவான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க-சீன ஒப்பந்தங்களின் விதிகளை அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையிலான எந்தவொரு அதிகாரப்பூர்வ மற்றும் இராணுவ தொடர்புகளையும், சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com