தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

News image

ஜெயக்குமார்(கோப்புப்படம்)

Updated On :21 பிப்ரவரி 2022, 6:36 pm

DIN

சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

திமுக தொண்டரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் தாக்கிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் வாக்குப்பதிவின் போது அதிமுகவினரால் தாக்கப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை தண்டையார் பேட்டை காவல்   நிலையத்தில்  ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தண்டையார்ப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.