மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சீர்காழியில் நாளை (நவ.18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக சீர்காழியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :17 நவம்பர் 2022, 1:53 pm

DIN

தொடர் மழை காரணமாக சீர்காழியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் சீர்காழியில் உள்ள பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மட்டும் நாளை (வெள்ளிக்கிழமை) 18-11-2022 விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.