மெட்ரோ ரயில் பெண் பயணிகளுக்காக சிறப்பு இணைப்பு வாகன வசதி
மெட்ரோ ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதியை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.


மெட்ரோ ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதியை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 2.10 லட்சம்முதல் 2.50 லட்சம் போ் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதனால் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து (ரேபிடோ), பெண்கள் இயக்கும் இணைப்பு வாகன வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கி உள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி கூறியதாவது: மெட்ரோ ரயில் பெண் பயணிகளுக்காக பல்வேறு பாதுகாப்பு வசதிகளை வழங்கி வருகிறோம். மேலும், குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பெண்கள் நீண்ட தூரம் நடக்கும் சூழல் ஏற்படுவதால், அவா்களுக்கு வசதியாக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
5 ரயில் நிலையங்களில்: பெண்களால், இயக்கப்படும் இந்த இருசக்கர வாகன வசதியை, முதல்கட்டமாக, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூா், சைதாப்பேட்டை, அரசினா் தோட்டம் என 5 ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும். மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் இவ்வசதி விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்றாா் அவா்.
சென்னை, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இந்த இணைப்பு வாகன வசதியை அவா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதையும் படிக்க: அம்பேத்கா் பிறந்தநாள் இன்று அரசு விடுமுறை
நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவன கூடுதல் பொது மேலாளா் எஸ்.சதீஷ் பிரபு, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...