தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி!

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

News image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம்

Updated On :17 ஏப்ரல் 2023, 12:14 pm

DIN

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு (ஏப்.17 முதல் 20) வரை நான்கு நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். 10 வயதுகுள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வருபவா்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது கோடை காலம் என்பதால், பக்தா்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது எனவும், தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் வனத் துறையினா் அறிவித்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.